ஏப்ரல் மாதம் யாருக்கெல்லாம் அதிஸ்டம்; 12 ராசிகளின் பலன்கள்!
ஏப்ரல் மாத கிரக நிலைகளின் படி, இந்த மாதத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவார்கள் மற்றும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் பெறுவார்கள்.
அதே சமயம் சில ராசிக்காரர்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும். இப்போது 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 12 ராசிக்காரர்களின் பலன்கள் எவ்வாறு உள்ளது என பார்க்கலாம்.
12 ராசிக்காரர்களின் பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! தொழில் ரீதியாக இந்த மாதம் கடின உழைப்பு நிறைந்ததாக இருக்கும். கடின உழைப்பால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் எதிர்பார்த்த வேலையைப் பெற வாய்ப்புள்ளது. மாதத்தின் இரண்டாம் பகுதியில் பணியிடத்தில் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். பின் வேலையையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதமானது தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கும். பணிபுரியவர்கள் உடன் வேலை செய்வோருடன் நல்லுறவை பேணுவதன் மூலம், பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. இந்த மாதமானது மிகவும் இனிமையாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் வேலையில் உங்களின் அர்ப்பணிப்பு நல்ல முன்னேற்றத்தை தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதமானது தொழில் ரீதியாக சிறப்பாக இருக்காது. எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இருப்பினும் முயற்சிகளை கைவிடாதீர்கள். மேலும் எதிர்மறை எண்ணங்களை மனதில் நுழையவிடாதீர்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியில் நல்ல செய்திகளைப் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது தொழில் ரீதியாக சூப்பராக இருக்கும். ஆனால் அதிக கடின உழைப்பு தேவைப்படும். வேலை தேடுபவர்கள் பிடித்த வேலையைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேணுவதன் மூலம், வேலையில் நல்ல வெற்றியைக் காணலாம். முக்கியமாக பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். உங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். சிலர் பதவி உயர்வைப் பெறலாம். அதோடு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை இம்மாதத்தில் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே ஏப்ரல் மாதம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். அரசு வேலைக்கு தேர்வு எழுதியிருந்தால், அதில் வெற்றி கிடைக்கும். மேலும் விரும்பிய வேலையைப் பெற சிறப்பான வழிகாட்டியின் ஆதரவைப் பெறுவீர்கள். மொத்தத்தில் இந்த மாதம் தொழில் ரீதியாக வெற்றிகள் குவியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதம் தொழில் ரீதியாக அவ்வளவு நன்றாக இருக்காது. உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்க தாமதமாகும். இருப்பினும் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். மேலும் எதிர்மறை எண்ணங்களை மனதில் எழவிடாதீர்கள். இப்படி இருந்தால், நிச்சயம் வெற்றியை விரைவில் பெறலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் அதிகம் போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். மேலும் பலவிதமான பிரச்சனைகளை சந்தக்க நேரிடும். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோருடன் நல்லுறவை பேண முயற்சிக்க வேண்டும். வெற்றி பெற விரும்பினால், கடுமையாக உழைக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது தொழில் ரீதியாக சற்று கவலையாக இருக்கும். உங்களின் திறமைக்கேற்ப உங்களால் பணியிடத்தில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் போவதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இந்த மாதத்தில் மனச்சோர்வால் பாதிக்கப்படாமல் இருக்க தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது தொழில் ரீதியாக சிறப்பானதாக இருக்கும். பணியிடத்தில் மற்றவர்களுடன் நல்லுறவைப் பேணுவீர்கள். உங்களின் நடத்தையால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்து, பதவி உயர்வை வழங்கலாம். இம்மாதம் மிகவும் இனிமையாக இருக்கும். மொத்தத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே ஏப்ரல் மாதத்தில் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக இம்மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு அவசர முடிவும் உங்கள் கடின உழைப்பு அனைத்தையும் பாழாக்கிவிடும். முக்கியமாக எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட்டு, நேர்மறை எண்ணங்களுடன் வேலையில் ஈடுபடுங்கள். இதனால் நல்ல பலனை மாத இறுதியில் பெறலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதம் உங்களுக்கு தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வெற்றியைப் பெற அதிகம் போராட வேண்டியிருக்கும். இம்மாதத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்படலாம். இதனால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழிலில் வெற்றி பெற விரும்பினால், கடுமையாக உழைக்க வேண்டும்