பெண்ணொருவரை கொலை செய்த வழக்கில் 20 வயதுடைய நபர் கைது
பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பேராதனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர் கண்டி முருதலாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒக்டோபர் 15 ஆம் திகதி கண்டி யஹலதென்ன பிரதேசவாசிகள் 65 வயதுடைய பெண்ணை அவரது வீட்டிற்குள் சடலமாக கண்டெடுத்துள்ளனர்.
சம்பவம்
கூலித்தொழிலாளியான சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சொந்தமான தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளார்.
எனினும் திருடப்பட்ட நகைகளில் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளதோடு பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த நான்கு மாதங்களில் கண்டி பொலிஸ் பிரிவில் பதிவாகும் ஆறாவது கொலை இதுவாகும்.
இதற்கு முன்னர் கடுகன்னாவ, வெலம்படை, கண்டி, உகுரஸ்ஸ பிட்டிய மற்றும் எலுகொட பிரதேசங்களில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு இளைஞன் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குற்றச் செயல்கள் இடம்பெற்று இரண்டு வாரங்களுக்குள் இந்த ஆறு கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.