மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் 2 பெண்கள் கைது
கொழும்பு கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை மற்றும் லுனுகம்வெஹெர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 மற்றும் 31 வயதுடைய இரு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.