கார்க் எண்ணெய் முனையங்களை இலக்கு வைத்த அமெரிக்கா; வெடிப்புச் சத்தங்களால் அதிர்வு
ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை (7) கார்க் தீவுப் பகுதியில் பலமான வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அதேவேளை ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதமானவை கார்க் தீவு ஊடாகவே நடைபெறுகின்றன.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாகத் திறக்கத் தவறினால், அந்தத் தீவை அழிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.