போதைப் பொருளுடன் சிக்கிய 19 வயதுடைய பெண் ; இரகசிய தகவலால் ஆணொருவரும் கைது
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “சென்டோ” என்பவரின் சகாவும் பெண் ஒருவரும் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கல்கிஸ்ஸை படோவிட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள் பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஆணும் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணும் ஆவர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
“சென்டோ”வின் சகா கஹதுடுவ பிரதேசத்தில் டிசம்பர் 14 ஆம் திகதி கார் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது.
அத்துடன், “சென்டோ”வின் வழிகாட்டுதலின் கீழ் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரிவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.