மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசபட்ட 19 வயது இளைஞன் ; இறுதியில் நேர்ந்த துயர்
மாத்தறை - அக்குரஸ்ஸ வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை - அக்குரஸ்ஸ வீதியில், கொட்டகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் மாத்தறை திசையை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

சம்பவ இடத்திலேயே பலி
இதன்போது தூக்கி வீசப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பேருந்தின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பிட்டபெத்தர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார்.