இந்தியாவில் பிடிபட்ட பிரபல போதை வர்த்தகரின் சகாக்கள் இலங்கையில் கைது
இந்தியாவின் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான 'பழனி ஷிரான் குரோரியன்' என்பவரின் முக்கிய சகாக்கள் நால்வர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புறக்கோட்டை பொலிஸ் விசேட பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மட்டக்குளி, கெசல்வத்தை, மாளிகாவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பழனி ஷிரானின் போதைப்பொருட்களைக் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கும் பணியை அவர்கள் செய்து வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அவர்கள், ஒரு நாளைக்கு 50 கிராம் போதைப்பொருளை விற்பனை செய்வதன் மூலம் 15,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.