வயல் வெளிக்குள் கவிழ்ந்த பேருந்து ; 19 பேர் காயம்
கஹதுடுவ, தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று இன்று (25) மாலை வீதியை விட்டு விலகி வயல்வெளியொன்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 19 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸார் நடவடிக்கை
வீதியில் வந்த மற்றுமொரு வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோதே, பேருந்து வீதியை விட்டு விலகி இந்த விபத்து சம்பவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 19 பேரில் 17 பேர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொருவர் களுபோவில போதனா வைத்தியசாலையிலும், இன்னுமொருவர் வேதர வைத்தியசாலையிலும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த எவரினதும் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.