இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நாமல் ராஜபக்ஷ சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் வளர்ச்சிகள், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரக் காட்சிகள், மற்றும் அவை வளரும் நாடுகளின் மீது செலுத்தும் தாக்கங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், இந்திய - இலங்கை இடையிலான வரலாற்று ரீதியான இருதரப்பு உறவுகள், தற்போதைய கூட்டுறவுத் திட்டங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இருதரப்பு பார்வைககளும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.