சிறுவர்கள் இருவர் போதைப்பொருளுக்கு அடிமை; சகோதரி நிர்க்கதியில்; உறவினர்களுக்கு நீதிமன்றம் அழைப்பு
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 14 மற்றும் 12 வயதுடைய சிறுவன் மற்றும் அவரது சகோதரியைப் பொறுப்பேற்கக்கூடிய உறவினர்கள் யார் என்பதை ஆராய்ந்து, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நன்னடத்தை அலுவலக அதிகாரிக்கு மாளிகாகந்த நீதவான் ஜனிதா ரொஷணி பெரேரா உத்தரவிட்டார்.
ஐஸ் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு, நன்னடத்தைப் பராமரிப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டிருந்த குறித்த இரு சிறுவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கவனத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமை
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, நன்னடத்தைப் பராமரிப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டிருந்த 14 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இரு சிறுவர்களும் பாடசாலைக்குச் செல்வதில்லை என காவல்துறைக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், மாதம்பிட்டிய காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின்போதே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, 220 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிறுவர்களின் தாயாரும் நெருங்கிய உறவினர்கள் சிலரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.