பிரித்தானியாவில் உள்ள 150 பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!
பிரித்தானிய நாட்டில் பாதுகாப்பற்ற நிலையில் 150 பாடசாலைகள் காணப்படுவதாகவும் அவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் இயங்குவதாகவும் அவை இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பிரித்தானியாவில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், பாடசாலைக் கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி 150 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இருப்பினும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வேறு இடங்களில் அப் பாடசாலைகள் செயல்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானிய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.