கொழும்பு வைத்தியசாலையில் கணவர்களால் தாக்கப்பட்ட 30 மனைவிகள்
இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள கடந்த 10 நாட்களில் குடிபோதையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக காயமடைந்த 150 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களில் 30 மனைவிகள் தங்கள் கணவர்களால் தாக்கப்பட்டனர் என்று அவர் கூறினார். ஏனையவர்கள் அயலிலுள்ளவர்களுடனான தகராற்றினால் காயமடைந்த ஆண்களாவர்.
மேலும், கடந்த 10 நாட்களில் வீட்டில் விழுந்து, தீக்காயம் அடைந்த சுமார் 100 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் 23 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள். கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.