காதலிப்பதாக கூறி சிறுமி துஸ்பிரயோகம் ; 22 வயது இளைஞருக்கு விளக்கமறியல்
காத்தான்குடியில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (04) உத்தரவிட்டார்.
காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக தெரிவித்து சம்பவ தினமான 2ஆம் திகதி அப்பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் வைத்து துஸ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
சிறுமி வைத்தியசாலையில்
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த இளைஞனை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.