எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர்...விவசாயிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இறத்தோட்டைபிரதேச செயலாகப் பிரிவில் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இறத்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் பெரும்போக ஆரம்பக் கட்ட விவசாய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் எலிக் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சுமார் 6000 நோய் தடுப்பு வில்லைகள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் 5000 வில்லைகள் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் இவதரை ஒரிய முறையில் பெற்று விவஸ்யிகள் தமது கருமங்களை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.