அரசாங்கத்தில் இருந்து வெளியேற தயாராகியுள்ள 15 எம்பிக்கள்
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் பதினைந்து எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற தயாராகி வருவதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்திற்கு சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நெருங்கிய உறவைப் பேணி வருகின்றது. எங்களுக்கு குறைந்தபட்ச சம்பளமே கிடைக்கின்றது. ஏனைய தொகை கட்சிக்கு செல்கின்றது.
நாம் எப்படி இப்படி வாழ முடியும்? நாடாளுமன்றம் முடிந்ததும் பேருந்தில் ஏற்றி எம்.பி.க்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். மறுநாள் காலை மீண்டும் பஸ் வந்து பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்.
அதைத் தவிர எங்களுக்கு வேறு வாழ்க்கை இல்லை’’ என்றார். இதன் காரணமாக எதிர்காலத்தில் அரசாங்கத்தில் உள்ள சுமார் பத்து அல்லது பதினைந்து உறுப்பினர்கள் பதவி விலகப்போவதாக இக்குழு ஐக்கிய மக்கள் சக்தியின் நண்பரிடம் தெரிவித்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.