வெசாக் தினத்தை முன்னிட்டு யாழில் 14 கைதிகள் விடுவிப்பு
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விஷேச பணிப்பின் பெயரில் வெசாக் தினத்தை முன்னிட்டு 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
988 கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு
அதேவேளை வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 988 கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 34வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படுதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் அனைத்து சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய 982 ஆண் கைதிகள் மற்றும் 6 பெண் கைதிகள் 988 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.