பாடசாலை சென்ற 13 வயது மாணவனுக்கு நேர்ந்த துயரம் ; கதறும் உறவுகள்
ஹட்டன் நோட்டன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 13 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 7.40 மணிக்கு ஹட்டன் விமல் சுரேந்திர சாலையில் ஒஸ்போன் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஹோட் ஒப் செம்மறி பகுதியில் உள்ள பிரதான சாலையில் இடம் பெற்று உள்ளது.

பேருந்து சாரதி கைது
சம்பவத்தில் உயிரழந்தவர் நோட்டன் கணபதி வித்தியாலத்தில் தரம் 8 கல்வி பயிலும் மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவன் இன்று காலை தனது இல்லத்தில் இருந்து விமல் சுரேந்திர நகருக்கு தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்த வேளையில் துவிச்சக்கர வண்டியில் பிரேக் இல்லாமல் முன்னாள் வந்துகொண்டிருந்த பேருந்தில் மோதியுள்ளார்.
இதன் போது படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வேளையில் உயிரிழந்துள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் சம்பவம் குறித்து நோட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.