இலங்கையின் பிரபல மருத்துவமனையில் 120க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு டெங்கு
காலி - கராபிட்டிய மருத்துவமனையில் கடந்த சில வாரங்களில் 120க்கும் மேற்பட்ட ஊழியர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இளைய ஊழியர்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் , தற்போது சிகிச்சை பெற்று வரும் பலர் இன்னும் இருப்பதாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
டெங்குவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் எவரின் நிலையும் கவலைக்கிடமாக இல்லை என்றும், ஒரு குழு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
மருத்துவமனை ஊழியர்களுக்கு மருத்துவமனையிலேயே டெங்கு நோய் தொற்றியிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.