கடலில் அடித்து செல்லப்பட்ட 12 இளைஞர்கள் : ஒருவர் மாயம்
பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட 12 பேரில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் பாணந்துறை உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பாணந்துறை, கெசல்வத்த, கெமுனு மாவத்தையை சேர்ந்த 18 வயதுடைய கேசன் சந்தருவன் என்ற இளைஞரே இவ்வாறு காணமல் போயுள்ளார்.
மீட்பு பணிகள்
காணாமல் போன இளைஞன், தனது மூத்த சகோதரர், இரண்டு நண்பர்கள் மற்றும் எம்பிலிப்பிட்டிய பகுதியிலிருந்து சுற்றுலாவிற்கு வந்த எட்டு பேர் கொண்ட குழுவுடன், பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவர்கள் திடீரென அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அச்சமயம், கடற்படை மற்றும் காவல்துறை உயிர்காப்பாளர்கள், கடலில் குதித்து அலையில் அடித்துச் செல்லப்பட்ட 11 பேரை மீட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.