புத்தளத்தில் 4 பேர் உட்பட 11 காட்டு யானைகள் உயிரிழப்பு!
புத்தளத்தில் கடந்த 8 மாதங்களுக்குள் 4 பேர் உட்பட 11 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்ட செயலகத்திற்குற்பட்ட புத்தளம், ஆனமடுவ, மஹாக்கும்புக்கடவல, வண்ணாத்திவில்லு, நவகத்தேகம, பல்லம ஆகிய பகுதிகளிலே யானைகள் சஞ்சரிப்பதாக புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் காட்டு யானைகளை ட்ரோன் கமராக்களின் மூலம் கண்காணிக்கப்பட்டு காட்டுப் பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பல பகுதிகளில் யானைவேலிகள் அமைக்கப்பட்டிருந்தும் யானை வேலிகளை தந்திரமான முறையில் உடைத்துவிட்டு காட்டு யானைகள் கிராமத்திற்குள் வருவதைக் கட்டுபடுத்த முடியாமல் இருக்கின்றன.
இதனாலேயே மனித யானைகள் மோதல்கள் இடம்பெறுவதாக புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.