மட்டக்களப்பில் 11 வயது சிறுமி மரணம் ; 14 வயது சகோதரன் நன்னடத்தை இல்லத்தில்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பகுதியில், வீட்டின் தண்ணீர் தொட்டியிலிருந்து 11 வயது சிறுமியின் உடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது 14 வயது சகோதரன், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறுவர் நன்னடத்தை இல்லம்
நீதவானின் உத்தரவுக்கு அமைய குறித்த சிறுவன் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், உயிரிழந்த சிறுமிக்கும் அவரது சகோதரனுக்கும் இடையே கையடக்க தொலைபேசி தொடர்பான வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து இந்த துயர சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின்போது, வீட்டின் குளியலறை தண்ணீர் தொட்டிக்குள் சிறுமியின் உடலம் கிடந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும், சிறுமி தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.