ஆற்றில் தவறி விழுந்து 10 வயது மாணவன் உயிரிழப்பு
பொகவந்தலாவை, கெசல்கமுவ ஓயாவில் தவறி விழுந்து 10 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொகவந்தலாவை லின்போட் தோட்டத்தை சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
தனது தாத்தாவுடன் இன்று பிற்பகல் கால்நடைகளுக்கான உணவு சேகரிக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாத்தா புல் வெட்டிக்கொண்டிருந்தபோது பேரனைக் காணாத நிலையில், அப்பகுதி மக்களின் உதவியுடன் கெசல்கமுவ ஓயாவில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மாணவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட உடலம் பொகவந்தலாவை பிரதேச மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.