இன்று முதல் அமுலுக்கு வரும் மீண்டும் அதிகரித்துள்ள எரிபொருட்களின் விலைகள்
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sahana
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தியமைக்கப்பட்டு, அவற்றின் புதிய விலைப் பட்டியலை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைப் விபரங்கள் வருமாறு:

- லங்கா டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூபா 5 இனால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூபா 397ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூபா 392).
- லங்கா சுப்பர் டீசல் 4 லீற்றர் ஒன்றின் விலை ரூபா 15 இனால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூபா 543 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூபா 528).
- பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூபா 424 ஆகப் பதிவாகியுள்ளது (முந்தைய விலை: ரூபா 414.00).
- பெட்ரோல் 95 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை ரூபா 15 இனால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூபா 490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூபா 475).
மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, லீற்றர் ஒன்று தொடர்ந்து ரூபா 285 என்ற நிலையிலேயே விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US