1,500 இ.போ.ச. பேருந்து சேவைகள் இரத்து
நாட்டை உலுக்கிய தித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக சாலைத் தடைகள் ஏற்பட்டதினால், இலங்கை போக்குவரத்து சபையினால் இயக்கப்படும் சுமார் 1,500 பேருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இரத்து செய்யப்பட்ட இந்த பேருந்துகளில் சுமார் 15,000 பயணிகள் முன்னதாக ஆசனங்களை முன்பதிவு செய்திருந்ததாக இ.போ.ச. பேருந்துகளுக்கான ஆசன முன்பதிவுகளும் ஆரம்பிக்கப்படுள்ளது.

ஆசன முன்பதிவு சேவை
ஆசன முன்பதிவு சேவையை கையாளும் நிறுவனம், ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகள் தங்களுக்கு விருப்பமான வேறு எந்த திகதிக்கும் தங்கள் முன்பதிவுகளை மீளமைத்துக் கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது.
மாற்றுத் திகதியை பெற்றுக்கொள்ள பயணிகள் 1315 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது 070 3110 506 ஊடாகத் தொடர்பு கொள்ளலாம். மீளமைப்பிற்கு மேலதிக கட்டணங்கள் எதுவும் அறவிடப்படாது என்றும் இ.போ.ச. குறிப்பிட்டுள்ளது.
தற்போது, நுவரெலியா, நாவலப்பிட்டி, யாழ்ப்பாணத்திற்கான 87 ஆம் இலக்கப் பாதை, வலப்பனை, மூதூர் போன்ற இடங்களுக்கான பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் , ஏனைய இடங்களுக்கான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதுடன் ஆசன முன்பதிவுகளும் மீண்டும் கிடைக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.