04 வீடுகளை உடைத்து திருடிய 02 கள்வர்கள் கைது!
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இருதயபுரம் பிரதேசத்தில் 4 வீடுகளை உடைத்து பணம் , தங்க ஆபரணங்கள் , கையடக்க தொலைபேசிகளை திருடிவந்த இரண்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (08.08.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியின் 04 வீடுகளிளும் கதவை உடைத்து உள்நுழைந்து அங்கிருந்து தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகள் பணம் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தொடர்ச்சியான விசாரணையின் பின் இன்று புதன்கிழமை (08.08.2023) நாவக்கேணி பிரதேசத்தில் 30 மற்றும் 32 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாகியிருந்த குறித்த நபர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க ஆபரணங்கள், கையடக்க தொலைப்பேசிகள் மற்றும் பணம் என்பவை மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 21 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்உத்தரவிட்டுள்ளார்.