ஆன்-லைன் மூலம் உணவு ஓடர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஆன்-லைன் மூலம் சைவ உணவு ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு சிக்கன் பிரியாணி வினியோகம் செய்யப்பட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பொருட்களை மக்கள் ஆன்-லைன் மூலம் வாங்குவதற்கு பழகிவிட்டனர்.
அதில் உணவு , உடை உள்ளிட்ட அனைத்துப்பொருட்களும் அடங்கும். இவ்வாறு ஆன்-லைன் மூலம் வினியோகம் செய்யப்படும் பொருட்களில் சில நேரங்களில் பொருட்கள் மாற்றி வழங்கப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
சைவ உணவு ஆர்டர் - சிக்கன் பிரியாணி வினியோகம்
இந்நிலையில் புனேவை சேர்ந்த பங்கஜ் சுக்லா என்பவர் ஆன்-லைன் மூலம் ஜொமோட்டோவில் சைவ உணவு ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு சிக்கன் பிரியாணி வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பங்கஜ் சுக்லா,
ordered paneer biryani from pk biryani house karve nagar pune maharashtra and I found a chicken piece in it(I am a vegetarian) I already got refund but this os still a sin since I am a religious person and it has hurt my religious sentiments.#pkbiryani #zomato pic.twitter.com/nr0IBZl5ah
— Pankaj shukla (@Pankajshuklaji2) May 13, 2024
புனேவின் கார்வே நகரில் உள்ள ஒரு கடையில் பன்னீர் பிரியாணி ஆர்டர் செய்தேன். ஆனால் எனக்கு வினியோகம் செய்யப்பட்ட அந்த பிரியாணியில் சிக்கன் துண்டு இருந்தது. நான் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவன். இது என் மனதை பாதித்தது என பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அவரது பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து ஜொமோட்டோவுக்கு எதிராக விமர்சனங்களை பதிவிட்டனர்.
அதனை தொடர்ந்து ஜொமோட்டோ அவரது பதிவுக்கு பதில் அளித்ததுள்ளதாகவும் அதில், புகார்தாரரின் பில், போன் நம்பர் போன்றவற்றை சரிபார்க்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றதது.