சனி பகவானால் பொற்காலம் பெறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடிய நீதியின் கடவுகளாக கருதப்படுகிறார். மேலும் நவகிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். அதுமட்டுமின்றி அவ்வப்போது சனி பகவான் தனது நிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவார்.

அப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அந்த வகையில் ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் வரை சனி பகவானின் நிலையில் 4 முறை மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

இப்படி சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது.
இப்போது ஜூலை முதல் டிசம்பர் வரை எப்போதெல்லாம் சனியின் நிலையில் மாற்றம் ஏற்படப்போகிறது என்பதையும், அதனால் அதிஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும் காண்போம்.

ரிஷப ராசி
சனி பகவானின் இந்த நிலை மாற்றங்களால் ரிஷப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

மிதுன ராசி
சனி பகவானின் இந்த நிலை மாற்றங்களால் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய நம்பிக்கை வரும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

தனுசு ராசி
சனி பகவானின் இந்த நிலை மாற்றங்களால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். வணிகர்களுக்கு ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சிறந்ததாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலை வலுவடையும். கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும். பணப்பிரச்சனைகள் தீரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.

துலாம் ராசி
சனி பகவானின் இந்தநிலை மாற்றங்களால் துலாம் ராசிக்காரர்கள் சனி பகவானின் சிறப்பான ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது. வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வெற்றியும், நிதி நன்மைகளும் கிடைக்கும்.
