சூரியனின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கம் ராசிக்காரர்கள்
முக்கியமாக கிரகங்களின் ராஜாவான சூரியன், அதன் நிலையை மாற்றி ஒரு புதிய ராசிக்கு நகரப் போகிறார். அதாவது இன்றைய தினம் ஆகஸ்ட் 17, 2025 அன்று, சூரியன் சிம்ம ராசியில் 01:41 மணிக்குப் பிரவேசிக்கிறார்.
சூரியன் 30 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் சரியான வீட்டில் அமர்ந்தால் அவர்கள் வாழ்க்கையில் மரியாதையையும், அங்கீகாரத்தையும் மற்றும் செல்வத்தையும் பெறுவார்கள்.
சூரியனின் ராசி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று நாம் இங்கு பார்ப்போம்.
மேஷம்
சிம்ம ராசிக்கு சூரியன் செல்வது மேஷ ராசிக்காரர்களுக்கு ஆடம்பரத்தையும், ஆதாயத்தையும் அதிகரிக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் நிதிநிலை எதிர்பாராத அளவிற்கு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய சொத்துக்கள் அல்லது வாகனம் வாங்கலாம். காதல் வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். சூரிய பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் பெரிய வெற்றியைத் தரப்போகிறது.
மிதுனம்
ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் சூரிய பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். வாழ்வின் அனைத்து துறைகளிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் மற்றும் திறமைகள் அதிகரிக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மேலும் உங்கள் பெற்றோரின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகளைப் பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் சூரியனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலுமே பெரிய வெற்றியைத் தரும். பல்வேறு முதலீடுகள் மூலம் அவர்கள் நல்ல வருமானம் ஈட்ட ஏராளமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். நிதிரீதியாக, சூரியனின் செல்வாக்கு அவர்களின் சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும். சிம்ம ராசியில் சூரியனின் பெயர்ச்சி, அவர்களின் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் கொடுக்கும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும், மேலூம் இந்த காலகட்டத்தில் அவர்களின் மரியாதையும் அதிகரிக்கும். அவர்கள் தொழில் வாழ்க்கையில், அவர்களின் புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும் மற்றும் புதிய வியாபாரங்கள் தொடங்குவதற்கான முயற்சிகளை தொடங்கலாம். இந்த காலகட்டம் முழுவதும் அவர்கள் மிகவும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.