புதன் பெயர்ச்சியால் வாழ்வில் வெற்றி அடைய போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
கடக ராசியில் புதன் பகவான் சஞ்சரிப்பது மற்றும் வக்கிர நிலை அடைவது உலக அளவில் பல துறைகளில் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சில நாடுகளுக்கு வணிகம் வேகமடையும்.

ஜூன் 22ஆம் திகதி, திங்கட்கிழமை மாலை 3:30 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். ஜூன் 29ஆம் திகதி கடக ராசியில் புதன் வக்கிர நிலை அடைய உள்ளார். பின்னோக்கி நகரும் புதன் ஜூலை ஏழாம் திகதி மீண்டும் மிதுன ராசிக்கு வருகிறார்.
கடக ராசிக்கு செல்லும் புதன் பகவான் அங்கு ஏற்கனவே சஞ்சரிக்கும் குரு மற்றும் சுக்கிரன் உடன் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார். புதன் இணைந்த முயற்சியின் தாக்கத்தால் உலக அளவில் பொருளாதார விஷயங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பெயர்ச்சியால் எந்த ராசிகள் பயனடையும் என்பதை நாம் இங்கு பார்போம்.

மிதுன ராசி
மிதுன ராசி அதிபதியான புதன் பகவான், ராசிக்கு தனஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த காலத்தில் உங்களுடைய வேலை மற்றும் தொழில் தொடர்பான துறைகளில் நன்மைகளை கொண்டு வரும். மேலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். நிதிநிலை சிறப்பாக இருப்பதால், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படலாம். உங்களுடைய குடும்ப பொறுப்புகள் சிறப்பாக செய்து முடிக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான சாதகமான சூழல் உருவாகும்.

கடக ராசி
கடக ராசியில் புதனின் பெயர்ச்சி மற்றும் கடக லக்னத்தில் குரு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தால் திரிகிரக யோகத்தை உருவாக்கும். இதன் காரணமாக இந்த காலத்திலும் உங்களுக்கு மிகவும் சுப பலனை தரக்கூடியதாகவும், உங்களுடைய ஆளுமை திறன் மேம்பட கூடியதாக இருக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய புத்திசாலித்தனமான மற்றும் இனிமையான பேச்சு திறமையால் பணியிடத்தில் வேலைகளை சிறப்பாக முடிக்க முடியும். லாபத்தை அடைய முடியும். வியாபாரம் தொடர்பாக நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் கௌரவத்தை அதிகரிக்கும்.

கன்னி ராசி
கன்னி ராசி அதிபதியான புதன் பகவான் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு மற்றும் சுக்கிரன் உடன் சேர்ந்து இருக்கும் இந்த காலத்தில், உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். அதனால் குடும்பத்தின் மீது நம்மை முன்னேற்றமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உங்களுடைய நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள் பூர்த்தி அடையும். வியாபாரத்தில் லாபம் ஈட்டும் வாய்ப்புகள் உருவாகும். நீங்கள் செய்யக்கூடிய தொழில் புதிய ஒப்பந்தங்களை பெறலாம். சமூகத் தொடர்புகள் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

துலாம் ராசி
துலாம் ராசி நண்பர்களுக்கு கர்ம ஸ்தானத்தில் புதனின் சஞ்சாரம் உங்களுக்கு பல விதத்தில் நல்ல தங்கத்தையும், லாபம் மற்றும் தொழிலில் முன்னேற்றத்தை கொண்டு வரும். உங்களுடைய பணி சூழல் சாதகமானதாக இருக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடு மற்றும் பேச்சு திறமையால் சுய தொழிலில் முன்னேற்றம் அடைய புதிய வழிகள் பிறக்கும். இந்த காலத்தில் உங்கள் பெற்றோரின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். சமூகத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும்.

மகர ராசி
மகர ராசி அன்பர்களுக்கு ராசிக்கு சம சப்தம ஸ்தானத்தில் புதனின் சஞ்சாரம் பெரிய அளவில் நன்மைகளை தரும். உங்களுடைய வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் பெறுகிறது. இவருடன் கூட்டணி வைத்து செய்யக்கூடிய தொழில் மற்றும் வேலையில் வேகமடையும் மற்றும் எதிர்பார்த்த முன்னேற்றத்தையும் காணலாம். திருமண வாழ்க்கையில் தம்பதியினர் மகிழ்ச்சியை காண்பார்கள். உங்கள் துணையுடன் உறவு வலுவடையும்.
