ஜீ தமிழ் நிகழ்ச்சியில் திடீரென சரிந்து விழுந்த மேடை!
தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ், நிகழ்ச்சியில் திடீரெனமேடை சரிந்து விழுந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விஷயங்களும் மக்களிடம் நல்ல ஹிட் தான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி மற்ற ஊர்களுக்கும் ஜீ தமிழ் பிரபலங்கள் சென்று நிகழ்ச்சிகள் நடத்தி, மக்களை சந்தித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் தஞ்சாவூரில் ஜீ தமிழ் சார்பில் நம்ம ஊர் திருவிழா என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் ஏராளமானோர் ஆர்வமாக நிகழ்ச்சியை காண வந்தார்கள்.
ஆனால் அங்கு எதிர்ப்பாரா விதமாக நிகழ்ச்சி மேடை சரிந்து விழுந்துள்ளது, இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மேடை சரிந்ததில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என கூர்அப்படுகின்றது.