ஆபாசக் கதைகளைப் பரப்பிய யூடியூபருக்கு வழங்கப்பட்ட தண்டனை
பெண்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி, ஆபாசக் கதைகளைப் பரப்பி யூடியூப் சேனலை நடத்தியதற்காக கடுவெல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொழும்பு பிரதான நீதவானால் ஆறு மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக இருந்த திமுத்து சாமர என்ற நபருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கொழும்புப் பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.
ஆபாசக் கதைகளை ஒளிபரப்பும் யூடியூப் சேனலில் தனது புகைப்படம் ஒளிபரப்பப்படுவதாக ஆசிரியை அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டது.