காரில் மசாஜ் செய்து களவெடுத்த பிரபல பெண் யூடியூபர் ; முதியவர் பரபரப்பு புகார்!
பிசியோதெரபிஸ்ட் என்ற பெயரில் ஸ்பாக்களில் பிரபல யுடியூபர் மதுமிதா வேலை செய்தபோது காரில் எனக்கு மசாஜ் செய்வதற்காக வந்தபோது 5 சவரன் நகையை கள்வெடுத்து சென்றதாக 89 வயது முதியவர் முறைப்படு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த பிரபல யுடியூபர் மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியூப் பக்கங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

89 வயது தொழிலதிபர் புகார்
குறிப்பாக தனது வீட்டில் நிறைய நகை இருப்பதாகவும், அடிக்கடி நகை கடைக்கு சென்று நகைகளை வாங்குவதாகவும் வீடியோக்களை வெளியிட்டார்.
மேலும் தனது குழந்தை பண கட்டுகளுடன் விளையாடும் வீடியோவையும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர் வீட்டின் பின்பற்ற கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் 118 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். அதன்பின் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மதுமிதா மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் மீது நெல்லையை சேர்ந்த 89 வயது தொழிலதிபர் புகார் அளித்துள்ளார்.
அதில் ‘2022ம் வருடம் பிசியோதெரபிஸ்ட் என்ற பெயரில் ஸ்பாக்களில் மதுமிதா வேலை செய்தபோது காரில் எனக்கு மசாஜ் செய்வதற்காக வந்தார்.
அப்போது என் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை அவர் திருடி சென்று விட்டார். நகையை திருடியதோடு இதுபற்றி வெளியே சொன்னால் அசிங்கப்படுத்துவேன் என மதுமிதா மிரட்டியதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.