யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த பெண்!
சென்னையில் பிரபலமான யூடியூபர் இர்பான் கார் மோதி பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபரான முகமது இர்பான், இர்ஃபான்ஸ் வியூ என்ற பெயரில் காணொளியை பதிவிட்டு வருகிறார்.
இவருடைய யூடியூப் சேனலில் 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.
இவ்வாறான நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் சென்றபோது இவருடைய கார் விபத்தில் சிக்கியதாக கூறுப்படுகிறது.
இந்த விபத்தில் 55 வயதுடைய பத்மாவதி என்ற பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இர்பானின் கார் சாரதி அசாரூதின் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட தகவல் கூறப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.