இசை நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம்
காலி, எல்பிட்டிய பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் நேற்றையதினம் (08-10-2024) பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவ்வாறு இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் வைஹேன, மட்டக்க பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய நபரே உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த இளைஞன் எல்பிட்டிய பொது விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.