இளைஞர் பரிதாப பலி; மருத்துவர் கைது
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி காத்தான்குடியில் கார் ஒன்றுடன் மோட்டர் சைக்கிள் மோதியதில் இளஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது . சம்பவத்தில் மோட்டர் சைக்கிளை செலுத்தி சென்ற இளைஞன் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, காரை செலுத்திய வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். சமபவத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆதம்பாவை முகமது அம்ஹர் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கிப் பயணித்த காரும் காத்தான்குடி, பீச் வீதியில் இருந்து பிரதான வீதி சமிக்கை விளக்கு சந்தியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுமே, சமிக்கை விளக்கு சந்தியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன்போது மோட்டர் சைக்கிளில் பின்னால் இருந்தவரே படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிகப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.