வவுனியா கோர விபத்தில் இளைஞர் பலி
வவுனியா, செட்டிகுளம் - மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற கொடூர வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், அதே திசையில் மெனிக்பாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியும் ஒன்றோடொன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பெரியதம்பனை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆவார். சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.