வேனுடன் மோதிய சைக்கிள் ; பலியான இளைஞன்
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாணந்துறை - களுத்துறை வீதியின் களுத்துறை வடக்கு பகுதியில், இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற வேன், அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிளோட்டி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.