மாஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் மாயம்!
நீர்கொழும்பு மாஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கொச்சிக்கடை காவல் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்திருந்தனர்.

நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளவர் யோகியான பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார். குறித்த இளைஞர் , சிலருடன் மாஓயாவிற்கு சென்று நீராடிக்கொண்டிருந்த போதே நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக இலங்கை கடற்படையின் உதவியுடன் பொலிஸார் தற்போது விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.