கோர விபத்தால் பலியான இளைஞன் ; தீவிரமாகும் விசாரணை
கம்பஹா - தனோவிட்ட பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிர்த் திசையில் வந்த பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இருவர் படுகாயம்
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞர் உடனடியாக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த பெண் பயணி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தனோவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.