இராணுவ முகாமில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் ; மேலுமொரு இராணுவ அதிகாரி கைது
முல்லைத்தீவு, முத்துதையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்று உயிரிந்த இளைஞனின் சம்பவம் தொடர்பில் மேலுமொரு இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இடதுகரை, ஜீவநகர் பகுதியிலுள்ள சிங்கப்படைப்பிரிவின் 12வது பற்றாலியனின் படைப்பிரிவை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
முகாமினுள் புகுந்த இளைஞர்களை தாக்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 3 சிப்பாய்களும் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்களுடன், இன்று கைது செய்யப்பட்ட 4 சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முகாமினுள் அத்துமீறி புகுந்திருந்த நிலையில் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்பட்ட நிலையில், தப்பியோடி, குளத்தில் மூழ்கியதாலேயே மரணித்ததாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வடக்கு - கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்
மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் அனைத்துக் கட்சிகளும் அவ்விடயத்தில் இணைந்து செயற்படுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.