மட்டக்களப்பில் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்!
மட்டக்களப்பு - கருவப்பங்கேணி பகுதியில் ரயில் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்றிரவு (25-02-2024) 11 மணியவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் கருவப்பங்கேணியைச் சேர்ந்த 25 வயதுடைய ஆகாஷ் என்றழைக்கப்படும் அசோக்குமார் சனுஜன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் கருவப்பங்கேணி பகுதியில் வைத்து குறித்த இளைஞன் மோதியதையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலத்தை பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.