பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் ; விசாரணைகளில் புதிய திருப்பம்
வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 1 ஆம் திகதி இரவு, வெலிக்கடை பொலிஸ் பிரிவின் நாவல பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்து ஒருவரை பொலிஸார் கைது செய்த நிலையில், பின்னர் அவர் குழப்பமாக நடந்து கொண்டமையால் பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சந்தேக நபரைக் கைது செய்த பின்னர் பொலிஸ் அதிகாரிகள் செயல்பட்ட விதம் மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் இறந்த சம்பவம் குறித்து, பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (04) விசாரணைகளைத் தொடங்கியது.