பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் சிக்கிய இளைஞன் ; தமிழர் பகுதியில் சம்பவம்
வவுனியாவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீடடொன்றில் இருந்து குறித்த நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்ட நெளுக்குளம் பொலிஸார், பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் பின், நேற்று (04) கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைதானவரிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இன்று (05)சந்தேக நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.