புத்தளத்தில் பொலிஸாரிடம் சிக்கிய இளைஞன்! வெளியான பகீர் பின்னணி
புத்தளம் பகுதியில் மாடுகளை சட்டவிரோதமாக திருடி விற்ற இளைஞர் ஒருவரை புத்தளம் பொலிஸார் நேற்று முந்தினம் (17-09-2022) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது வாடகைக்கு வாகங்களைப் பெற்று பல பகுதிகலுக்குச் சென்று மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த திருட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் நகரசபை உறுப்பினரான அஸ்கீன் என்பவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவித்ததாக பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
அஸ்கின் என்பவர் பிரபல மாட்டிறைச்சி வியாபாரியாகக் கருதப்படுவதுடன் குறித்த வியாபாரியான அஸ்கினின் வாகன சாரதியாக கைது செய்யப்பட்ட இளைஞர் பணிபுரிந்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், திருடப்பட்ட மாடுகளை இறைச்சிக்காக கொள்வனவு செய்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 2 மாடுகள் ஒரு ஆடு என்பவற்றை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் திருடப்பட்ட மற்றைய மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்பட்டு விற்பனை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டு மாடுகளை ஏற்றுவதற்கு பயன்படுத்திய வாடகைக்குப் பெற்றதாக தெரிவிக்கப்பட்ட வான் ஒன்றும் கெப்ரக வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் நாளை நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.