இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது
இந்தியாவில் கர்நாடக மாநிலம் நாயர்கோடு பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு தலைக் காதல்
குறித்த இளைஞன் அப்பெண்ணை ஒருதலைக் காதலாக தொடர்ந்ததாகவும், இளம்பெண் மறுத்தபோதும் அவரை தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இளம்பெண் முன்பே பொலிஸாரிடம் முறைபாடு அளித்ததைத் தொடர்ந்து, குறித்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் பிணையில் வெளிவந்து மீண்டும் குறித்த பெண்ணுக்கு தொந்தரவுகளை செய்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, அந்த இடத்தில் நடந்து சென்ற இளம்பெண்ணை வழிமறித்து, தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதாகவும், மறுத்த இளம்பெண்ணை மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இளம்பெண் உடுப்பி மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு அளித்ததையடுத்து, பொலிஸார் வழக்குப் பதிவு செய்து இளைஞனை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.