பேரிடரில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி மரணம்; சோகத்தில் மூழ்கிய கிராமம்
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஓஷாதி வியாமா திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் யுவதியின் உயிரிழப்பானது அந்தப் பகுதியில் உள்ள மக்களை பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு விசாகா வித்தியாலய மாணவி
களனி கங்கையின் ராணியாக முடிசூட்டப்பட்ட சேதவத்தை, கோட்விலாவைச் சேர்ந்த யுவதியான ஓஷாதி வியாமா என்பவரே நேற்று (11) இவ்வாறு உயிரிந்துள்ளார்.
25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கா? நபருக்கா? சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருக்கு இரு நாட்கள் காலக்கெடு
கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 19 வயதான இந்த யுவதி சமீபத்திய வெள்ளத்தின் போது இடம்பெயர்ந்த தனது அயல் வீட்டு மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல, இரவுபகலாக படகில் பணியாற்றி, பெரிய தியாகத்தை செய்ததாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.

தனது 3 வயதிலிருந்தே நீச்சல் கற்றுக்கொண்ட ஓஷாதி தனது 7 வயதில் 14 நிமிடங்கள் 41 வினாடிகளில் களனி ஆற்றின் குறுக்கே 1000 மீற்றர் நீந்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இதேவேளை ஓஷாதியின் சாதனையை காண கிராமவாசிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அன்றையதினம் களனி ஆற்றின் இருபுறமும் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் துணிச்சல் மிக்க யுவதியின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.