இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதிக்கு சரமாரி அடி; சம்பவத்தால் அதிர்ச்சி

Sri Lanka Crime Srilanka Bus
By Sulokshi Feb 07, 2026 02:30 PM GMT
Report

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இ.போ.ச சொந்தமான பேருந்தின் சாரதி மீது, அதே வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் இன்று (07) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் இ.போ.ச டிப்போவின் தரைக்கால முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதிக்கு சரமாரி அடி; சம்பவத்தால் அதிர்ச்சி | Ctb Bus Was Intercepted Driver Was Severely Beaten

சாரதி ஆசனத்தின் கதவைத் திறந்து தாக்குதல்

டயகமவில் இருந்து காலை 6:30 மணிக்குப் பயணத்தை ஆரம்பித்த குறித்த பேருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பின்னால் துரத்தி வந்த தனியார் பேருந்தின் சாரதி, இ.போ.ச பேருந்தை வழிமறித்து, சாரதி ஆசனத்தின் கதவைத் திறந்து தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து 5 நிமிடங்கள் முன்கூட்டியே புறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டே லிந்துலை, மெராயா நகருக்கு அருகில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து சாரதியும் நடத்துனரும் இணைந்தே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹட்டன் டிப்போ தரைக்கால முகாமையாளர் மேலும் தெரிவித்தார். சாரதி தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்தினுள் பாடசாலை மாணவர்கள் உட்பட ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம் பேருந்தில் பயணித்த பயணி ஒருவரால் கையடக்கத் தொலைபேசி ஊடாக வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் தரைக்கால முகாமையாளர் கூறியுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US