பெற்றோல் இல்லாது நடுவழியில் நின்ற மோட்டார் சைக்கிளால் யுவதிக்கு நேர்ந்த நிலை!
யக்கல கல்குளம வீதியில் நீராவிய விகாரை அருகிலுள்ள வளைவில் பெண்ணொருவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் பெற்றோல் இல்லாமல், நடுவீதியில் நின்றுள்ளது.
அச் சந்தர்ப்பத்தில் உதவி செய்வதாகக் கூறி வந்த இளைஞர்கள் இருவர் பெண்ணின் கழுத்தில் உள்ள இரண்டு லட்ச ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
அளுத்கம பிரதேசத்தில் வசிக்கும் 24 வயது பெண்ணொருவர், மிஹிந்தலை விகாரையை தரிசிக்கச் செல்லும் வழியில் தனது மோட்டார் சைக்கிளில் பெற்றோல் இல்லாததால் இடைவழியில் நின்றுவிட்டது.
இதனையடுத்து பெண் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த போத்தலை எடுத்து, பெற்றோல் வாங்க செல்ல முற்பட்டுள்ளார்.
அப்போது வேறொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், யுவதியிடம் உதவி செய்யவா எனக் கேட்டு அருகில் வந்து தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.