தகாத உறவிலிருந்த மனைவியை வெட்டி காணொளி வெளியிட்ட கணவன் ; கதறி அழும் குழந்தை ; இறுதியில் நடந்த ட்விஸ்ட்
தன் மனைவி வீட்டில் இன்னொரு நபருடன் இருந்ததைக் கையும் களவுமாகப் பிடித்து அவரை வெட்டி விட்டு குழந்தையுடன் தலைமறைவாகி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட கணவன் தான் இப்போது பேசும் பொருளாகி உள்ளது.
தஞ்சாவூர் அருகே நடந்த கள்ளக்காதல் விவகாரம் வீடியோவாக வைரலாகி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தாலும் அதை பலரும் வேதனையுடன் பார்க்கிறார்கள்.

தகாத உறவு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மயில் பாளையம் பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் மனைவிக்கு வேறு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் தாங்காமல் கணவர் மனைவியை முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு குழந்தையுடன் தலைமறைவாகிவிட்டார்.
முன்னதாக, தன் மனைவி வீட்டில் கள்ளக்காதலன் இருப்பதை கையும் களவுமாகப் பிடிப்பட்டதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். மற்றொரு வீடியோவில், தன் மகனை முன்னால் நிறுத்தி, செல்லம் அப்பா செத்து போயிட்டா பொழைச்சுக்குவியா..என்றதும் அந்த குழந்தை எதுவும் சொல்ல தெரியாமல் ம் என்று மட்டும் சொல்கிறது.
நான் இல்லாட்டி என்ன செய்வ? அழுவேன் என்றது, அழக்கூடாது அப்பாஅ மேலே இருப்பேன். உனக்கு ஆசிர்வாதம் செய்வேன் என்றதும் அப்பா என்ன சொல்கிறார் என்று எதுவும் புரியாமல் அந்த குழந்தை கேட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த காட்சியை வீடியோவில் பார்த்தவர்களின் இதயத்தை உருக்கியது.
இன்னொரு வீடியோவில், காவல்துறை அதிகாரிகளுக்கு வணக்கம். ஐயா என் குடும்பம் என் மனைவியின் கெட்ட சகவாசத்தால் அழிந்துவிட்டது. நன்றாக இருந்த என் குடும்பம் நாசமாகிவிட்டது இதற்கு காரணம் தகாத உறவிலிருந்தவர்தான் தான் என குறிப்பிட்டார்.
மேற்கண்ட வீடியோக்கள் அனைத்துமே பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த நடவடிக்கையில் பொலிஸார் உடனடியாக இறங்கினார்கள்.
அப்போதுதான், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கழுத்து, கன்னத்தில் அறுபட்ட நிலையில் தர்மராஜ் மனைவி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது.
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் குழந்தை இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற தனிப்படை பொலிஸார் குழந்தையை மீட்டு தஞ்சாவூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோல கணவரையும் பொலிஸார் மீட்டனர்.