இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை; கிழித்து தொங்க விட்ட அண்ணாமலை!
நடிகை திரிஷாவின் பெயரில் திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ எனும் புதிய நற்பணி இயக்கம் திங்கட்கிழமை (நவம்பர் 23) தொடங்கப்பட்டுள்ளது.
பேரவையின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான தச்சநல்லூர் தொழிலதிபர் ராஜகோபால், நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் அமைப்பின் இலச்சினையை வெளியிட்டு நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.

வெட்கக்கேடானது -அண்ணாமலை விமர்சனம்
திரிஷா வணக்கம் செலுத்தும் படத்துடன், ‘பதவிக்காக அல்ல! தமிழக மக்களின் உரிமைக்காக!’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள அந்த இலச்சினை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந் நிலையில் த்ரிஷா பேரவை' என்ற பெயரில் புதிய அமைப்பொன்றைத் தொடங்கியுள்ளமை தொடர்பில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
'இளைய புரட்சித் தலைவி' என்ற அடைமொழியுடன் அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது எனத் தெரிவித்த அவர், தமிழகத்தில் கல்வியறிவு பெற்ற பலர் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னமும் நடிகர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு அவர்களைக் கொண்டாடும் கலாசாரம் தொடர்வதாக விமர்சித்துள்ளார்.